Monday, November 5, 2012

ஏன்? எதற்கு? எப்படி?


எழுதாளரைப் பற்றி:
clip_image002சரி வெட்டி Introduction எல்லாம் போதும் விசயத்துக்கு வருவோம். சுஜாதாவின் லட்சக்கான ரசிகர்களுள் நானும் ஒருவன். இவரது இயற்பெயர் ரங்கராஜன். சுஜாதா தனது தனித்துவமான எழுத்து நடையால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள்,கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.இவரும் அப்துல் கலாம் அவர்களும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
1962இல் "இடது ஓரத்தில்" என்ற சிறுகதையை குமுதம் வாரஇதழில் சுஜாதா அவர்கள் எழுதினார் குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார். நாம் இப்போது வாக்களிக்கும் எந்திரம் உருவாக முக்கிய காரணமாக இவர் இருந்தார். சுஜாதா மே மாதம் 3 ஆம் நாள் 1935 இல் பிறந்தவர். பெப்ரவரி மதாம் 27 ஆம் நாள் , 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினர்.

மேலும் இவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள:
Author's we1Wikipedia-logo-en1logo_facebook


ஏன்? எதற்கு? எப்படி?
பதிப்பகம் : விகடன் பப்ளிகேஷன்

          ஏற்கனவே இது நான் முதன்முதலாக படிச்ச புத்தகம்னு சொல்லி இருந்தேன். இந்த புத்தகம் விகடன் இதழில் கேள்வி பதில் தொடராக வந்ததின் தொகுப்பு ஆகும். இரண்டு பாகங்களாக வருகிறது. இந்த புத்தகம் கிட்டத்தட்ட ஒரு கலைக் களஞ்சியம் போல நமக்கு எதாவது ஒரு கேள்வி தோனுச்சுனா இந்தப் புத்தகத்த புரட்டுங்க கண்டிப்பா பதில் கிடைக்கும்.

       மனிதர்களின் அடுத்த பரிணாம வளர்ச்சி, விலங்குகளுக்கு ரத்தவகை இருக்கா?, நாம குரங்குல இருந்து பரிணாமம் அடையாம இருந்து இருந்தா என்ன நடந்து இருக்கும்? ( இதை மையமாக வைத்து நன் ஒரு கதையே எழுதி இருக்கேன். பொறுங்க பொறுங்க அதையும் கூடிய சிக்கிரம் போஸ்ட் பண்ணி பயமுறுத்துறேன்), கடவுள் இருக்காரா? மொழிகள் பற்றி? வான் வெளி பற்றி? இப்படி இன்னும் நெறைய கேள்விகள் வியக்க வைக்கும் பதில்கள் படிக்க ரொம்பவே சுவாரசியமா குடுத்து இருக்காரு சுஜாதா. படிங்க பாஸ். நாம வெட்டியா பேசுறதுக்கு நெறையவே மேட்டர் இந்த புக்ல இருந்து கிடைக்கும் . நாமளும் பெரிய அறிவாளினு பந்தா பண்ணிக்கலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
clip_image010 clip_image012
600024     600024

Monday, October 29, 2012

அறிமுகம் - புத்தக விமர்சனம்



புத்தகம் பற்றிய review எழுத வேண்டுமானால் எகிப்தில் சுமார் கி.மு. 2400 ஆம் ஆண்டு வரையாவது சென்று பார்க்க வேண்டும். தற்போதைய அச்சு முறை புத்தகப் பதிப்பு என்பது கி.பி. 1300 ஆம் ஆண்டின் மத்தியில் பிறந்தது. இப்படி இதையெல்லாம் எழுதின உங்களுக்கு புரியுதோ இல்லையோ எனக்கு எதுமே புரியாது. அதனால நாம வரலாற இதோட விட்டுருவோம்.

ப்ளாக் எழுதும் நானே ப்ளாகின் நாயகன் ஆன்னேன். சரி நீ இபோ எதுக்கு தசாவதாரம் வசனத்தை எல்லாம் இழுக்குறேனு கேட்கிறது புரியுது. Flow வந்து விட்டது. நான் முதன்முதலா புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுன அது சுஜாதா அவர்கள் எழுதின ஏன்? எதற்கு? எப்படி? புத்தகம் தான். அதனால அத பத்தியே first post பண்ணாலாம் அப்படினு நினைக்கிறேன்.

டேய்! சுஜாதாவோடப் புத்தகத்தைப் பத்தியெல்லாம் விமர்சனம் எழுத நீ என்ன அவ்வளோ பெரிய அப்பா டக்கரானு எல்லாம் கேட்காதீங்க. புக் ரிவ்வியூல நான் அந்த புக்ல என்ன படிச்சேன், புக் எங்க எல்லாம் கிடைக்கும், அதை எழுதியவர் பற்றியும், அவரின் பிறப் படைப்புகள் பற்றியும் மட்டுமே இருக்கும். புத்தகத்தை விமர்சிக்கும் எண்ணதோடு எழுதப் படவில்லை. எனக்கே தெரியும் மத்தவங்க எழுதின புத்தகத்தை (மட்டும்) விமர்சிக்கிற அளவுக்கு தகுதி கிடையதுனு. (எப்புடி எஸ்கேப் ஆனாம்ல)


Tuesday, October 23, 2012

உன் குரல்




உன் குரலை கேட்பதற்காகவே....
தினமும் உன்னை அழைக்கிறேன்...
தயவு செய்து பேசு....

தோற்றுத்தான் போகிறது



கோடை வெயிலும் 
உந்தன் கோபத்தின் முன்னால்.....
தோற்றுத்தான் போகிறது 

Monday, October 22, 2012

நான் சொல்வது எல்லாம்

நான் சொல்வது எல்லாம் 
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
நான் கவிங்கன் என அனைவரும் 
ஏற்றுக்கொண்ட பின் ....

நீ அருகில் இருந்தால்

நீ அருகில் இருந்தால் 
அனைத்துமே 
அழகாவும் ரசிக்கவும் 
வைக்கின்றன 

மின்சாரம் இருக்கிறது

பூக்களை மொய்க்கும் 
வண்டுகளைப் போல 

மக்களும் மொய்கிறார்கள்
தியேட்டருக்கு காசு உள்ளவர்களும் 
கோவிலுக்கு காசு இல்லாதவர்களும் 
மின்சாரம் அங்கே 
இருக்கிறது என்று..........

Saturday, October 20, 2012

அறிமுகம்


எல்லாருக்கும் வணக்கம்,

எனக்கு எழுதனுமுனு ஆசை வந்த போது நானும் ரெண்டு மூணு ப்ளாக் create பண்ணி அதுல மூணு போஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம் என்ன எழுதுறதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டு போய்டேன். ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னால தமிழ் ப்ளாக்ஸ் பத்தி கூகுள்ல தேடினேன் நெறயா பேரு சூப்பரா எழுதுறத படிச்சதும் என்னக்கும் திரும்ப எழுதனும்னு ஆசை வந்துருச்சு. சரி என்ன எழுதலாம்னு யோசிச்சேன். டக்னு தலைக்கு மேல பல்ப் எரிஞ்சது வேற என்ன சினிமாவும், சினிமா விமர்சனமும் தான் ஆனா ஏற்கனவே கருந்தேள், ஹாலிவுட்பாலா இப்படி பல பெரிய தலைகள் இருக்கும்போது நாம ப்ளாக்கையும், போஸ்டையும் யார் பாக்க வருவா சொல்லுங்க, சரி கம்ப்யூட்டர் பத்தியும், போட்டோஷோப், போட்டோகிராபி பத்தி எழுதலாம்னு நினைச்ச PIT, தமிழில்போட்டோஷோப் இப்படி குழுவா சேந்து எழுதி கலக்குறாங்க, தமிழ் ப்ளாக் நிலைமை இப்படி இருக்கு


சரிடா நீ இப்போ என்ன தான் இந்த ப்ளோக்ல எழுத போறனு தானே கேட்குறீங்க... அது தெரிஞ்சா நான் எதுக்கு இப்படி தேவையே இல்லாம அறிமுகமுனு மொக்க போட போறேன். யாரும் கோவப்பட்டு க்ளோஸ் பண்ணாதீங்க.... என்கிட்ட இருக்குற கொஞ்சோண்டு மூளைய (கண்டிப்பா இருக்குன்னு ஒரு நம்பிகை) use பண்ணி கவிதை, கதை, ப்ளாக் விமர்சனம், புத்தக விமர்சனம் ( நானும் ஒரு புத்தக புழுன்னு காமிக்க), பயணக் கட்டுரை ( எந்த ஊரு எல்லாம் சுத்தி இருக்கோமுன்னு பந்தா காமிக்கதான் இந்த பயணக் கட்டுரை) இப்படி சில யோசனைகளோடு இந்த ப்ளோக்கை இனிதே துவங்குகிறேன்....