எல்லாருக்கும் வணக்கம்,
எனக்கு எழுதனுமுனு ஆசை வந்த போது நானும் ரெண்டு மூணு ப்ளாக் create பண்ணி அதுல மூணு போஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம் என்ன எழுதுறதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டு போய்டேன். ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னால தமிழ் ப்ளாக்ஸ் பத்தி கூகுள்ல தேடினேன் நெறயா பேரு சூப்பரா எழுதுறத படிச்சதும் என்னக்கும் திரும்ப எழுதனும்னு ஆசை வந்துருச்சு. சரி என்ன எழுதலாம்னு யோசிச்சேன். டக்னு தலைக்கு மேல பல்ப் எரிஞ்சது வேற என்ன சினிமாவும், சினிமா விமர்சனமும் தான் ஆனா ஏற்கனவே கருந்தேள், ஹாலிவுட்பாலா இப்படி பல பெரிய தலைகள் இருக்கும்போது நாம ப்ளாக்கையும், போஸ்டையும் யார் பாக்க வருவா சொல்லுங்க, சரி கம்ப்யூட்டர் பத்தியும், போட்டோஷோப், போட்டோகிராபி பத்தி எழுதலாம்னு நினைச்ச PIT, தமிழில்போட்டோஷோப் இப்படி குழுவா சேந்து எழுதி கலக்குறாங்க, தமிழ் ப்ளாக் நிலைமை இப்படி இருக்கு.
சரிடா நீ இப்போ என்ன தான் இந்த ப்ளோக்ல எழுத போறனு தானே கேட்குறீங்க... அது தெரிஞ்சா நான் எதுக்கு இப்படி தேவையே இல்லாம அறிமுகமுனு மொக்க போட போறேன். யாரும் கோவப்பட்டு க்ளோஸ் பண்ணாதீங்க.... என்கிட்ட இருக்குற கொஞ்சோண்டு மூளைய (கண்டிப்பா இருக்குன்னு ஒரு நம்பிகை) use பண்ணி கவிதை, கதை, ப்ளாக் விமர்சனம், புத்தக விமர்சனம் ( நானும் ஒரு புத்தக புழுன்னு காமிக்க), பயணக் கட்டுரை ( எந்த ஊரு எல்லாம் சுத்தி இருக்கோமுன்னு பந்தா காமிக்கதான் இந்த பயணக் கட்டுரை) இப்படி சில யோசனைகளோடு இந்த ப்ளோக்கை இனிதே துவங்குகிறேன்....
நண்பரே,
ReplyDeleteவருக! தன்னம்பிக்கையோடு நிறைய எழுதுங்கள். நிச்சயம் மக்கள் வரவேற்பார்கள். தமிழின் சிறந்த வலைப்பூக்களில் ஒன்றாகத் தங்கள் துணை எழுத்து திகழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
தங்களின் ஊக்குவிப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி
Delete- துணை எழுத்து
நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/index.php?r=1
ReplyDelete