Wednesday, July 8, 2015

ஓவியம்

காற்றில் 
ஓவியமிடும் 
உந்தன் 
நெற்றியோர முடியில் 
சிக்கி தவிக்கிறேன்

வேண்டும்

அவள்
சாய்ந்துக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கும்
ஜன்னலாய் இருக்க வேண்டும்
நான்

அவள்
இறுக்கிப் பிடித்து
எழுதும் எழுதுக்கோலாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
படித்து சிரிக்கும்
கவிதையாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
துள்ளிக் குதித்து
ரசிக்கும் மழையாய்
இருக்க வேண்டும்
நான்

அவள்
கூந்தலை
அலைபாய செய்யும்
காற்றாக வேண்டும்
நான்

அவள்
தட்டிக் கொடுக்கும்
விசைப்பலகையாக
வேண்டும்
நான்

மேல் சொன்ன அவளாக
நீ வேண்டும்
உன்னவனாக வேண்டும்
நான்

மீ.ஜீவானந்தம் | ‪#‎கிறுக்கல்‬

I wrote this myself only but I feels that heard in somewhere...