Monday, November 24, 2014

அவள் நினைவுகள்

சில்லென்ற காற்றாய் அவள் நினைவுகள் 
சோவென்று பெய்யும் மழையாய் அவளது சிரிப்பு 
கண்ணாமூச்சியாடும் மின்னலாய் அவள்...

Wednesday, November 5, 2014

பாஸ்வேர்டு–புத்தகம்


            கோபிநாத் எழுதிய தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க, நீயும் நானும், நேர் நேர் தேமா என எல்லா புத்தங்களையும் படித்துள்ளேன். பொதுவாக கோபி அவர்களின் புத்தகத்தில் அன்றாட வாழ்க்கை, சமூக அவலங்கள், தனி மனித முன்னேற்றம் போன்றவை பற்றி எழுதப் பட்டு இருக்கும் என்பது என் கருத்து.
              கோபி அவருடைய தனிப்பட்ட அனுபவத்தோடு எழுதுவது படிக்க எளிமையாகவும் அதே சமயம் சுவரஸ்யமாகவும் இருக்கும். ஒருவர் நம்மோடு அமர்ந்து பேசுவது போலவே இருக்கும். இந்த பாஸ்வேர்டு புத்தகமும் அப்படி தான். இது ஆனந்த விகடனில் ஒரு தொடராக வந்ததன் தொகுப்பு.
              இந்த புத்தகத்தில் இருக்கும் முதல் கட்டுரையை படித்தலே உங்களுக்கு இதைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த குழந்தையின் உரையாடலைப் படிக்கும் போது அந்த காதில் கேட்பதை உணர முடிந்தது.
1, 19, 25 ஆகிய மூன்று கட்டுரைகளும் என்னை பாதித்தது.
ரசித்த வரி:
“இது என் கதை… இதில் யார் வேண்டுமானாலும் வருவார்கள்”
யோசிக்க வைத்த சில வரிகள்:
”நம் கருத்துக்கும் செயல்பாடுகளுக்கும் முரண்படுகிற மனிதர்களைவிட, சொன்னதை எல்லாம் கேட்கும் கருவிகளோடு புழங்குவது சுகமாக இருக்கிறது.”
”என் கண் வழியே பார்க்கும் போது ஆனந்தமாகத் தெரியும் அடுத்தவரின் வாழ்க்கை, அவர்கள் கண் வழியே பார்க்கிறபோது சுமையாக தெரிகிறது.”
             பேரூந்திலோ, காரிலோ அல்லது ரயிலிலோ ஏறி ஜன்னலோர இருக்கை பார்த்து அமர்ந்து வெளியே   நடப்பதை பார்க்கவும் ரசிக்கவும் வாய்ப்பு கிடைத்தும் அதை விட்டு காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு கைபேசியில் முழ்கி போகும் நம்மைப் போன்றவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும் எத்தனை விசயங்களை நாம் இந்த சமூகத்தில் கவனிக்க, ரசிக்க தவறி இருக்கிறோம் என்று.
              இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியவிட்டாலும் பரவயில்லை. ஒரு நாளாவது கொஞ்சம் கைபேசியை விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை தான் பாருங்களேன்.
நான் புரிந்துக் கொண்ட பாஸ்வேர்ட் இது தான்.
தாங்கள் புரிந்து கொண்டதை Comment செய்யவும்.
இணையத்தில் வாங்க:
images